ஈங்கூரில் சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளர்
சேலம் கோட்ட ரயில்வே பொதுமேலாளர் ஸ்ரீனிவாஸ்யிடம் மனு அளிக்கும் காட்சி.
ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று சேலம் கோட்ட ரயில்வே பொதுமேலாளர் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி ஆகியோர் பயணிகள் பாதுகாப்பு, மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சேலம் கோட்ட ரயில்வே பொதுமேலாளர் ஸ்ரீனிவாஸ்நிருபர்களுக்கு பேட்டியளித்தார் .
அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று கணேசமூர்த்தி எம்.பி. கேட்டு கொண்டதன் பேரில் நான் மாநில நெடுஞ்சாலை துறையினருடன் சேர்ந்து கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தை ஆய்வு செய்தோம். அதனை விரிவுபடுத்தி வாகன நெரிசலை சரி செய்வது என்பது குறித்த சாத்திய கூறுகளை ஆராய கூறியிருக்கிக்றோம். மேலும், ஈரோடு ரயில் நிலையம் மேம்படுத்துவது குறித்து எம்.பி.யிடமும் பொது மக்களிடமும் கருத்துகளை கேட்டுள்ளோம். கள ஆய்வு செய்தும் பார்த்துள்ளோம்.
ஈரோடு ரயில் நிலையத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஈரோடு சேலம் கோட்டத்தில் பயணிகள் ரயில் இயக்குவதற்கான கோரிக்கையும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நெரிசல் குறைவாக உள்ள இடங்களில் பொது ரயில் பெட்டிகள் இயக்க ஆரம்பித்து விட்டதாகவும் தமிழ்நாட்டில் எப்போது இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும் .
ரயில்வே நுழைவு பாலங்களில் தேங்கும் தண்ணீரை குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது, அதிக கொள் திறன் கொண்ட குழாய்கள் மூலமும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிரந்திர தீர்வாக மேற்கூறை அமைத்து தண்ணீர் நுழைவு பாலங்களின் உள்ளே செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஈங்கூரில் சரக்கு முனையம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது முடியும் போது ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு போக்குவரத்து நெரிசல் குறையும்.
ஈரோடு ரயில் நிலையம் மிக முக்கியமானது எனவும், இங்கு பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, விபத்து நடக்கும்போது அனுப்பப்படக் கூடிய எமர்ஜென்சி ரயில்கள் அனைத்தும் இங்கு உள்ளது. இந்த காரணத்தினால் நடைமேடைகளை அதிகப்படுத்த சாத்தியக்கூறுகள் மிக குறைவு. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. கொரோனா கட்டுக்குள் வந்ததும் மீண்டும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu