கனரா வங்கி சார்பில் மசாலா பொடிகள் தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி முகாம்

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக அனைத்து விதமான மசாலா பொடிகள் தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கனரா வங்கி சார்பில் மசாலா பொடிகள் தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி முகாம்
X

பைல் படம்.

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக "அனைத்து விதமான மசாலா பொடிகள், அப்பளம், ஊறுகாய் போன்றவை தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி" முகாம் வரும் 01-02-2023 முதல் 11-02-2023 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி முகாமிற்கு ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.


" வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் " அல்லது " நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் " இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 8778323213 , 7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு , ஈரோடு - 638002 என்ற இடத்தில் பயிற்சி நடைபெற உள்ளது.

Updated On: 24 Jan 2023 2:15 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...