ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி
இலவச அழகு கலை பயிற்சிக்கான அறிவிப்பு.
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக " பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி " வருகின்ற 04-04-2022 முதல் 11-05-2022 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சியில் " ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். " 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
" வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் " அல்லது " நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் " இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர முன்பதிவு அவசியம். கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 8778323213, 7200650604 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu