ஈரோடு பூண்டு கடையில் லஞ்சம் கேட்ட போலி அதிகாரி கைது

ஈரோடு பூண்டு கடையில் லஞ்சம் கேட்ட போலி அதிகாரி கைது
X

கைது செய்யப்பட்ட மனோகரன்.

ஈரோடு கடைவீதியில் உள்ள பூண்டு கடையில் லஞ்சம் கேட்ட போலி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் உள்ள பூண்டு கடையில் லட்சுமி டிரேடர்ஸ் என்ற பூண்டு கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பவானியை சேர்ந்த மனோகரன் (60) என்பவர் தன்னை தொழிலாளர் நலத்துறை அலுவலர் எனக்கூறி லஞ்சம் கேட்டதால் சந்தேகமடைந்த, பூண்டு கடை உரிமையாளர் சரவணன் ஈரோடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மனோகரன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் ஏற்கனவே தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai automation in agriculture