நான் முதல்வன் திட்ட கருத்தரங்கை காணொலி மூலம் பார்த்த ஈரோட்டு மாணவிகள்

நான் முதல்வன்  திட்ட கருத்தரங்கை காணொலி மூலம்  பார்த்த ஈரோட்டு மாணவிகள்
X

நான் முதல்வன்" திட்ட கருத்தரங்கினை காணொளியில் கண்டு களித்த ஈரோடு மாணவிகள்

ஈரோட்டில் ஏராளமான மாணவிகள் காணொலி காட்சி வாயிலாக கண்டு களித்தனர்நான் முதல்வன்" திட்ட கருத்தரங்கினை

ஈரோட்டில் ஏராளமான மாணவிகள் காணொலி காட்சி வாயிலாக கண்டு களித்தனர்

நான் முதல்வன் திட்ட கருத்தரங்கினை ஈரோட்டில் ஏராளமான மாணவிகள் காணொலி காட்சி வாயிலாக கண்டு களித்தனர்

முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்ட கருத்தரங்கினை ஈரோட்டில் ஏராளமான மாணவிகள் காணொலி காட்சி வாயிலாக கண்டு களித்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பட்டை ஊக்குவிக்கும் வகையில் "நான் முதல்வன்" என்ற திட்டத்தை தமிழக முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியினை ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் கண்டு பயன்பெறும் வகையில் எல்.இடி டிவி, லேப்டாப், ஸ்மார்ட் திரைகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாணவர்களுடன் காணொலி வாயிலான கருத்தரங்கங்கில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் எல்இடி, 51 தொலைக்காட்சிகள், 537 லேப்டாப், 81 ஸ்மார்ட் கிளாஸ், 82 எல்சிடி புரஜெக்டர், 111 ஆய்வகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தவிர இந்த நிகழ்ச்சியை யூடியூப் லிங் மூலம் மாணவ மாணவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 111 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 26 ஆயிரத்து 429 மாணவ மாணவிகள் அவர்கள் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சி கண்டு களித்தனர். இதுதவிர ஈரோடு மாவட்டத்தில் உள்ள 146 தனியார் பள்ளிகளில் இந்த நிகழ்ச்சியை காணும் வகையில் இணையதள இணைப்பு வழங்கப்பட்டிருந்தது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!