ஈரோட்டில் தங்கமணி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் ரெய்டு

ஈரோட்டில் தங்கமணி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் ரெய்டு
X

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

ஈரோட்டில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சாந்தான்குளம்,வில்லரசம்பட்டி மற்றும் சக்தி நகர் ஆகிய மூன்று பகுதிகளில் இச்சோதனை நடைபெற்று வருகிறது. இதில் சாத்தான்காட்டில் கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டிலும், அவரது சகோதரர் சக்தி நகரில் உள்ள பாலகிருஷ்ணன் மற்றும் வில்லரசம்பட்டியில் உள்ள பிளைவுட் கம்பெனி நடத்தி வரும் செந்தில்நாதன் ஆகியோர் வீடுகளில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!