ஈரோடு மாநகராட்சி பகுதியில், தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்

ஈரோடு மாநகராட்சி பகுதியில், தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்
X

erode local news- ஈரோடு மாநகராட்சி பகுதியில், தார்சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி, அருகில் அதிகாரிகள் குழு.

erode local news- ஈரோடு மாநகராட்சி பகுதியில், தார்சாலை அமைக்கும் பணிகளை, அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

erode local news- ஈரோடு மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. புதிய தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாலை சீரமைப் புக்கு முதல் கட்டமாக ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஈரோட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால்சுன் கரா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் நாகரத்தி னம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச் சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் சூரம்பட்டி கோவலன் வீதி, என்.எஸ்.கே.நகர், சக்தி நகர், காரப்பாறை, கருவேப்பிலை வலசுரோடு, மாணிக்கம் பாளையம் அடுக்குமாடி பகுதி, மண்டல அலுவலகம், சொட்டையம்பாளையம், ராம்பாலக்காடு வீதி உள்ளிட்ட இடங்களில் ரூ.16 கோடியே 22 லட்சம் செலவில் தார் சாலை அமைக் கப்படுகிறது.

இதேபோல் கங்காபு ரத்தில் ரூ.10 லட்சம் செல வில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர்தொட்டியையும், தண்ணீர் பந்தல்பாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங் களையும் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையாளர் சுதா, செயற்பொறியாளர் விஜயகுமார், துணை பொறியாளர் சண்முகவடிவு, மண்டல தலைவர்கள் பி.கே.பழனிசாமி, சுப்பிரமணியம், சசிகுமார், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் குமார், பகுதி செயலாளர் அக்னி சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!