ஈரோட்டில் தந்தை படித்த பள்ளியை நெகிழ்ச்சியுடன் ஆய்வு செய்த எம்.எல்.ஏ

ஈரோட்டில் தந்தை படித்த பள்ளியை  நெகிழ்ச்சியுடன் ஆய்வு செய்த எம்.எல்.ஏ
X

ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.எ. திருமகன் ஈவெரா.

ஈரோடு கிழக்கு தொகுத் எம்.எல்.ஏ.திருமகன் ஈவெரா, தனது தந்தை படித்த சி.எஸ்.ஐ. பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ளது, அன்றைய லண்டன் மிசினரி பள்ளி; தற்போது இது C.S.I. துவக்கப்பள்ளியாக உள்ளது. இது, 1892 இல் தொடங்கப்பட்டு 130 ஆண்டுகளாக, அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியினை, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆய்வினை மேற்கொண்டார். இப்பள்ளியின் தாளாளர் ஜோசப், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முத்து பாவா என்கிற அப்துல் காதர், தலைமை ஆசிரியை மேரி தமிழ்ச்செல்வி ஆகியோர் வரவேற்றனர்.

எம்எல்ஏவின் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 1955 ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பு வரை இந்த பள்ளியில் படித்துள்ளார். இதன் ஆவணங்களை பார்த்து வியந்தார். இந்த ஆரம்ப பள்ளியினை தந்தைப் பெரியாரின் தந்தை வெங்கடப்ப நாயக்கர் அவர்களால்1885 இல் தானமாக அரை ஏக்கர் நிலம் வழங்கியுள்ளார். இந்த பள்ளியின் ஒரு பகுதியில் சர்ச் ஒன்று 1930 வரை ஆங்கிலேயர்களால் இயங்கியது. 1930 இல் பிரப் துரை, பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் பிரம்மாண்டமான ஆலயம் கட்டிய பின், அங்கு சர்ச் இடம் மாறிவிட்டது.

பழமையான, பாரம்பரிய சிறப்புமிக்க அரசு உதவிபெறும் இப்பள்ளிக்கு, மூன்று வகுப்பறைகள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டிடங்களை கட்டித்தர தலைமை ஆசிரியை & தாளாளர் கோரிக்கை வைத்தனர். மேலும் விளையாட்டு திடலுக்கு மேற்கூரை போட்டு தருமாறும் கோரிக்கை வைத்தனர். இதை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தி கொடுப்பதன் மூலம் பழைய பெருமையை மீட்டு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil