ஈரோடு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

ஈரோடு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
X

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு, வேட்பாளர் அறிமுக கூட்டம்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 40 வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக 60 வார்டுகளில் கூட்டணி கட்சியினர் போட்டியிடுகின்றனர். இதில் 40 வது வார்டு கூட்டணிக் கட்சியின் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் வேட்பாளர் முகமது ஆரிப் தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவரும், மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு பணிமனையை திறந்து வைத்து, வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கட்சியை சார்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story