நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஈரோடு ரசிகர்

நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஈரோடு ரசிகர்
X

நடிகை சில்க்ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஈரோடு ரசிகர் குமார்.

ஈரோட்டில் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை ரசிகர் ஒருவர் கேக் வெட்டி கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சில்க்ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அவரது ஈரோடு ரசிகரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு பேருந்துநிலையம் அருகே சேட் காலனியில் தேனீர் கடை நடத்தி வருபவர் குமார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

இவரது கடை முழுவதும் சில்க்ஸ்மிதாவின் வசீகரிக்கும் புகைப்படங்களை வைத்துள்ளார் என்பதுடன், சில்க்ஸ்மிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சில்க்ஸ்மிதாவின் படத்திற்கு முன்பு கேக் வைத்து கொண்டாடிய நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story
ai automation in agriculture