ஐ.எம்.ஏ. தமிழ்நாடு கிளை தலைவராக ஈரோடு டாக்டர் கே.எம் அபுல்ஹசன் தேர்வு

ஈரோடு பிரபல குழந்தைகள் மற்றும் லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணரும்,ஈரோடு சிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் அண்மையில் நடைபெற்ற இந்திய மருத்துவர் சங்கத்தின் (ஐ.எம்.ஏ) தமிழ்நாடு கிளையின் (2023- 2024 )ஆம் ஆண்டுக்கான மாநில தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே இந்திய மருத்துவர் சங்கத்தில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
இவர் 2006 ஆண்டு ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில் இமயம் என்ற பெயரில் புற்று நோயாளிகளுக்கான காப்பகத்தை உருவாக்கி அதனை அன்றைய இந்திய குடியரசு தலைவராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமினால் திறந்து வைக்கச் செய்தார். மேலும் ஜீவன் என்னும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சிகளை ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கும்,காவல் துறையினருக்கும்,பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கும் அளித்துள்ளார்.
பல்வேறு இலவச மருத்துவ முகாம்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வாட்ட - சாட்டம் என்ற திட்டத்தின் மூலம் உதவிகள், கொரோனா இலவச மருத்துவ சிகிச்சை மையங்கள்,உயர்கல்வி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்,கல்வி உதவித்தொகை திட்டங்கள் என பல்வேறு நலகாரியங்களை இவர் சிறப்பாக செய்துள்ளார். தற்பொழுது அகில இந்திய அளவில் செயல்படும் இளம் மருத்துவர் கூட்டமைப்பின் தேசிய தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu