ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தினவிழா

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தினவிழா

மாற்றுத்திறனாளிகள் தினவிழா.

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் தினவிழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 79 பேருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. நீலநிற மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவரும் உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.

இதைத்தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.95 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கையினையும், ஒரு மாற்றுத்தினாளிக்கு ரூ.36 ஆயிரம் மதிப்பிலான பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவியும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்களுக்கு சான்றுடன் கூடிய விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story