ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை: 57 செல்போன்கள் மீட்பு

ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை: 57 செல்போன்கள் மீட்பு
X

செல்போனை திரும்ப ஒப்படைக்கும் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் தொலைந்த 57 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக மீட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் தொலைந்து போன செல்போன்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் விசாரணை நடத்தி, 57 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சைபர் கிரைம் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன் பல்வேறு சம்பவங்களில் மொபைல் போன்களை தவறவிட்ட உரிமையாளர்களிடம் அவர்களின் கைபேசிகளில் வழங்கி அறிவுரை அளித்தார். மீட்கப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு 9,18678 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
crop opportunities ai agriculture