ஈரோடு மாநகராட்சி: 40வது வார்டு சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

ஈரோடு மாநகராட்சி: 40வது வார்டு சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு
X

தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர். 

ஈரோடு மாநகராட்சி 40வது வார்டில் சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் 40வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக பிரபு என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை செய்ததில் பிரபுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து எழுத்து பூர்வமாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் சுயேட்சை வேட்பாளர் பிரபுவை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது போலீசாருக்கும் வேட்பாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!