ஈரோடு மாநகராட்சி 51வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

ஈரோடு மாநகராட்சி 51வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
X

விஜயலட்சுமி 

ஈரோடு மாநகராட்சி 51 வது வார்டில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள விஜயலட்சுமி, போட்டியின்றி தேர்வாகிறார்.

ஈரோடு மாநகராட்சி 51 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த காஞ்சனா பழனிச்சாமி, மற்றும் கலா வின் மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது.

அதேபோல், சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த சங்கீதா என்பவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமிருந்த திவ்ய பாரதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஸ்வரி ஆகியோரும், வேட்புமனுவை இன்று வாபஸ் பெற்றனர். இதனால், திமுக வேட்பாளர் விஜயலட்சுமி மட்டும் களத்தில் உள்ளார். எனவே, அவர் போட்டியின்றி தேர்வாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!