ஈராேட்டில் நவ.27ல் மாபெரும் வேலைவாயப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

ஈராேட்டில் நவ.27ல் மாபெரும் வேலைவாயப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

வரும் 27ம் தேதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வரும் 27ம் தேதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

வரும் 27ம் தேதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்பவர்கள் (Employers) கலந்துகொண்டு 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி பெற்றவர்கள் பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது என்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, மின்னஞ்சல் முகவரி: erodejobfair@ gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!