விரைவில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளே போவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

விரைவில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளே போவார்:  ஈவிகேஎஸ் இளங்கோவன்
X

வாக்களித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.

பொய்யை மட்டுமே வைத்து எடப்பாடி அரசியல் செய்து வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் உள்ளே போவது உறுதியாகிவிட்டது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மூத்த நிர்வாகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மகாஜன உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதை மக்கள் புரிந்து கொண்டதாலும், தமிழர்களின் சமூக நீதி, சுயமரியாதை, மானம், மொழி, கலாச்சாரம் அகியவற்றை காப்பாற்ற தமிழக முதல்வர் ஸ்டாலினால் மட்டும் முடியும் என்பதை உனர்ந்து திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற எழுச்சி மக்களிடையே ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது. பொய்யை மட்டுமே வைத்து எடப்பாடி அரசியல் செய்து வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் உள்ளே போவது உறுதியாகிவிட்டதால் பயத்தில் பிதற்றுகிறார். கோவை வேலுமணிக்கு காவல்துறை தற்போது லேசான நடவடிக்கை எடுத்துள்ளது, இது போதாது. இவாறு பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!