மழை எதிரொலி: கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்

மழை எதிரொலி: கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்
X

கருங்கல்பாளையம் மாட்டு சந்தை.

கனமழை காரணமாக கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு 500 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மாற்றம் கொண்டு வருவது வழக்கம். இதேபோல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ,தெலுங்கானா, நேபாளம், கோவா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகள் வாங்கிப் செல்வதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெளிமாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வருவது இல்லை. மேலும் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் பசு - 300 எருமை - 150, கன்று - 50 என மொத்தம் 500 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இன்றும் வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடு விற்பனை மந்தமாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!