அமைச்சர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட திமுக பிரதிநிதி

அமைச்சர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட திமுக பிரதிநிதி
X

தர்ணாவில் ஈடுபட்ட திமுக பிரதிநிதி சுரேந்தர்.

ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் திமுக பிரதிநிதி, அமைச்சர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஈரோடு மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டில் வேறு நபருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறி திமுக பிரதிநிதி சுரேந்தர் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story