தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த வட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள்
வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வர இயக்கப்படும் பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் வேன்கள் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து இன்று கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளின் சார்பில் இயக்கப்படும் வாகனங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மாணவ, மாணவிகள் தப்பிப்பதற்கு போதுமான இடைவெளி உள்ள ஜன்னல் வைக்கப்பட்டுள்ளனவா, முதல் உதவி பெட்டிகள் மற்றும் அதனுள் தேவையான மருந்து பொருட்கள் உள்ளனவா, வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளனவா என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்த ஆய்வில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாகன பதிவு எண்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுதப்பட்டுள்ளனவா, ஒளிரும் பட்டைகள் முறையாக ஒட்டப்பட்டுள்ளனவா, தானியங்கி கதவுகள் சரியான முறையில் பொருத்தப்பட்டு இயங்குகின்றனவா என்பது குறித்தும் இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டது. சுமார் 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த ஆய்வின்போது பரிசோதிக்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu