மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி ஆர்ப்பாட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உதவித் தொகையை உயர்த்தக் கோரி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழகத்தை விட 40 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் 5 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்காக உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்பது சங்கத்தின் பல நாள் கோரிக்கையாகும். இதற்கிடையே தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர பராமரிப்பு தொகை 1000 இல் இருந்து 1500 ஆக தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. இந்நிலையில் 6 மாதமாகியும் உயர்த்தி வழங்கப்படத்தை கண்டித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!