ஈரோட்டில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்
X

 அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவ, மாணவிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தவறு செய்தவர்களுக்கு, உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும். தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே, ஈரோடு மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உரியமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அழகுக்கலை நிபுணர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!