நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

X
கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
By - Kumar, Reporter |13 Nov 2021 9:15 AM IST
நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் படுகொலையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீடாமங்கலம் ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நடேச.தமிழார்வன் நீடாமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்கு அருகாமையில் 8 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக நீடாமங்கலத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu