பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
X

பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு காந்திஜி சாலையில் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த ஊழியர்களின் போனஸ் மற்றும் நிலுவையில் உள்ள சம்பள பாக்கி ஆகிய பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்தோடு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதுகுறித்து ஒப்பந்ததாரர்களிடம் பேசி தீர்வு காணப்படும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் ஒப்பந்ததாரர்கள் சம்பளம் மற்றும் போனஸ் வழங்குவதை மறுத்து வருவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன்று காந்திஜி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!