பயிர்க்கடன், உரம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு

பயிர்க்கடன், உரம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு
X

கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் மற்றும் உரம் வழங்கக்கோரி, ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்த பாரதிய ஜனதா கட்சியினர்.

பயிர்க்கடன் மற்றும் உரம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி, பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில், 160க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பான்மையான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் உரம் கிடைக்கமால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜகவினர், கலெக்டரிடம் அனு அளித்தனர். அதில், அக்டோபர் 2021 முதல் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதாக அறிவித்து இருந்தனர். இதை நம்பி இருந்த விவசாயிகளிடம், நில ஆவணங்களான பட்டா,சிட்டா மற்றும் கிராம நிர்வாகம் நடப்பு அடங்கல் வாங்கி வருமாறு, கூட்டுறவு சங்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுபோன்ற நடை முறை இல்லாத நிலையில், விவசாயிகளை வருவாய்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் மற்றும் உரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!