ஈரோட்டில் பலி எண்ணிக்கை 702 ஆக உயர்வு: கொரோனாவுக்கு 641 பேர் சிகிச்சை

ஈரோட்டில் பலி எண்ணிக்கை 702 ஆக உயர்வு:  கொரோனாவுக்கு 641 பேர் சிகிச்சை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 702 பேர் பலியாகி உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தினமும் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துவரும் நிலையில் நேற்று 51 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 71 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 5ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 702 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 641 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்