/* */

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம்: ஈரோடு ஆட்சியர் அழைப்பு

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம்: ஈரோடு ஆட்சியர் அழைப்பு
X

இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு சம்பா பருவத்தில் நெல்-2 பயிர் பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், பயிர்க்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். நெல்-2 பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.528.00 செலுத்த வேண்டும்.

வருகின்ற நவம்பர் 15, 2021 ஆம் தேதி, சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். தற்போது வடகிழக்குப் பருவ மழை திவிரமடைந்துள்ள நிலையில், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து, தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 8 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை