வீணான குடிநீர்: துரிதமாக சரிசெய்த ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்

வீணான குடிநீர்: துரிதமாக சரிசெய்த ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்
X

ஈரோடு மாநகராட்சி 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெகதீஸ் துரித நடவடிக்கையால் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. 

ஈரோடு மாநகராட்சி 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்ன், துரிதமாக செயல்பட்டு தண்ணீர் வீணாவதை சரிசெய்தார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு காவேரி நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது குறித்து தகவல் கிடைத்தது. அந்த வழியாக ஆய்வு செய்ய சென்ற 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெகதீஸ், உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்து, குழாயை சரி செய்தார்.

இதனால் குடிநீர் வினியோகம் தடைபடாமல் சரியான நேரத்தில் வழங்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் ஜெகதீஸின் துரித நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!