ஈரோடு சிறப்பு முகாமில் 12, 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தல்

ஈரோடு சிறப்பு முகாமில் 12, 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தல்
X

பைல் படம்.

ஈரோடு சிறப்பு முகாம்களில் 12, 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி வாரந்தோறும் சனிக்கிழமை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என, 434 மையங்களில் நடந்த முகாமில் 1736 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்டனர்.

இதில் முதல் தவணை தடுப்பூசியை 1,990 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 10 ஆயிரத்து 20 பேரும், போஸ்டர் தடுப்பூசியை 619 பேரும் என மொத்தம் 12 ஆயிரத்து 629 பேர் நேற்று ஒரே நாளில் நடந்த முகாமில் தடுப்பூசியை செலுத்தி கொண்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளன.

Tags

Next Story
ai in future agriculture