பெருந்துறை அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

பெருந்துறை அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
X

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

பெருந்துறை சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில், அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக 60 வார்டுகளில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கு பெருந்துறை சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், ஈரோடு மாநகர மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான செங்கோட்டையன் கலந்துகொண்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க செல்லும் போது கடந்த 10 ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளை எடுத்துக் கூறியும், தற்போது நடைபெற்று வருகின்ற ஊழல் திமுக ஆட்சியை பொதுமக்களிடம் எடுத்துக்கூறியும் வாக்குகள் சேகரிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் மாவட்ட செயலாளர் மணி ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, மொடக்குறிச்சி சிவசுப்பிரமணியம், முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture