காங்கிரஸ் சார்பில் தியாகி ஈஸ்வரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

காங்கிரஸ் சார்பில் தியாகி ஈஸ்வரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
X

தியாகி ஈஸ்வரன் படத்திற்கு மரியாதை செலுத்தும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தியாகி ஈஸ்வரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள்.ஜி.ராஜன் தலைமையில் ஈரோடு கட்சி அலுவலகத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் தந்தையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தியாகியுமான ஈஸ்வரன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மொடக்குறிச்சி வடக்கு வட்டார தலைவர் ரவி, விவசாயப் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பூவை ராஜன், மனித உரிமைகள் துறை மாவட்ட தலைவர் சண்முகம், ஸ்ரீதர், அரவிந்த், ஆதி, ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்