பிரியங்கா கைதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பிரியங்கா கைதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
X

ஈரோடு சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பு பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியாயினா். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் பிரியங்காகாந்தியை, அம்மாநில போலீஸாா் கைது செய்தனா். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்புப் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசைக் கண்டித்தும், பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கமிட்டனர். இதில், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ், துணைத் தலைவா் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்