திருநங்கையை கடத்த முயற்சிப்பதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருநங்கையை கடத்த முயற்சிப்பதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்
X

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த திருநங்கை மற்றும் குடும்பத்தினர். 

திருநங்கையை 25 லட்சம் பணம் கேட்டு கடத்த முயற்சிப்பதாக மாணிக்கம் என்கிற செல்வி காவல் அலுவலகத்தில் புகார்.

ஈரோடு பெரியவலசு, இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் என்கிற செல்வி (40). திருநங்கையான இவர் இன்று தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்ட எஸ். பி. அலுவலத்திற்கு வந்து எஸ்.பி. சசி மோகனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் மேற்படி முகவரியில், எனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறேன். நான் சொந்தமாக தறிப்பட்டறை, டிராவல்ஸ், நிதி நிறுவனம் மற்றும் சிறு, சிறு தொழில் செய்து வருகிறேன்.

இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த 4 பேர், கடந்த 3 மாதமாக என்னை போனில் தொடர்பு கொண்டு ரூ. 25 லட்சம் தர வேண்டும் இல்லையென்றால் உன்னை கடத்தி விடுவதாக மிரட்டி வருகின்றனர். மிரட்டல் விடுக்கும் 4 பேர் மீதும் ஏற்கனவே, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், எனது குடும்பத்தாரையும் அவர்கள் நேரடியாகவும், போனிலும் மிரட்டி வருகின்றனர்.

இதனால் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த 4 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவவாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்