ஈரோடு எஸ்பியிடம் நடிகர் சூர்யா மீது புகார்

ஈரோடு எஸ்பியிடம் நடிகர் சூர்யா மீது புகார்
X

ஈரோடு எஸ்பியிடம் நடிகர் சூர்யா மீது புகார் 

ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் பாமக சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை அவதூறுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு நடிகர் சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் .அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் செயல்படுவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் பெருமாள், துணைச்செயலாளர் கணேஷ், நிர்வாகிகள் மூர்த்தி, முருகேசன், பாலா, கோவிந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!