மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் கூட்டமைப்புகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம் லட்சுமிபூர் கேரி என்ற இடத்தில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள், விவசாயிகள் கூட்டமைப்புகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஆர் திருநாவுக்கரசு தலைமையில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் மகன் காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!