தொழிலாளர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தொழிலாளர் நலத்துறை சார்பில் நலத்திட்ட  உதவிகள் வழங்கும் விழா
X

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி.

தொழிலாளர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொழிலாளர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 1257 நபர்களுக்கு 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, இணைய தளம் வாயிலாக விண்ணப்பங்கள் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவது விரைவில் சரி செய்யும் வகையில் இ-சேவை மையங்கள் பரவலாக்கப்படும் என்றார். தொடர்ந்து, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 15 சென்டர்களில் உள்ள 300 குழந்தைகளுக்கு 4 வருடங்களாக உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்தும் இந்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 மாதம் ஊதியம் வழங்கப்படாதது குறித்தும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவத்தற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்றும் கூறிய அவர், வேறு துறைகளில் இருந்து தற்காலிகமாக நிதி பெற முடியுமா அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் சமூக பொறுப்பு நிதி பெற்று திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்