ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு
X

கருங்கல்பாளையம் மாட்டு சந்தை.

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 400 பசுமாடுகள், 150 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 600 மாடுகள் மட்டுமே வந்திருந்தன.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை கரவை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது காரணமாக கடந்த வாரம் கூடிய மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையிலும் மாடுகள் வரத்து குறைந்தது. இன்று 400 பசுமாடுகள், 150 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 600 மாடுகள் மட்டுமே வந்திருந்தன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் கேரளா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் இன்று நடந்த மாட்டு சந்தையில் கேரளா மாநில வியாபாரிகள் வரவில்லை. கர்நாடகம், ஆந்திரா போன்ற ஒரு சில மாநிலங்களில் இருந்து குறைவான எண்ணிக்கையில் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று 80 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!