மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தில் அதிமுக கல்வெட்டு உடைப்பு

மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தில்  அதிமுக கல்வெட்டு உடைப்பு
X

சேதமடைந்த கல்வெட்டு.

மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் அதிமுக கல்வெட்டு உடைத்து சேதப்படுத்தபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி 80 அடி நால் ரோட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் எம்.பி. நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் கல்வெட்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் அ.தி.மு.க கல்வெட்டு உடைத்து சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் பரவியதும் பகுதி செயலாளர்கள் தங்கமுத்து, கோவிந்தராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் அந்த பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, இன்று அதிகாலை 4 மணிவரை கல்வெட்டு நல்ல நிலையில் சேதமில்லாமல் நன்றாகத்தான் இருந்தது. அதிகாலை 4 மணிக்குப் பிறகுதான் மர்மநபர்கள் யாரோ திட்டமிட்டு கல்வெட்டை சேதப்படுத்தி உடைத்துள்ளனர் என்றனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story