நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெய் பீம் படத்தில் வன்னியர்களின் அடையாள சின்னத்தை தவறாக சித்தரித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜெய் பீம் படத்தில் வன்னியர்களின் அடையாளச் சின்னமான அக்னி கலச படத்தை தவறாக சித்தரித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆகிய இருவரும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்பு மனி ராமதாஸிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும், சூர்யா அவரது தம்பி, அப்பாவின் திரைப்படங்களை திரையிடமால் தடுப்போம் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பா..ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வீரப்பன்சத்திரத்தில் மாநில து.பொதுச்செயலாளர் தாபா, பரமேஸ்வரன் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பிரபு, பி.டி.ராசு, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், தலைவர் பெருமாள் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future