'பெருந்துறையில் ஆட்டோமொபைல் நகரம்' அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

பெருந்துறையில் ஆட்டோமொபைல் நகரம் அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
X

 அமைச்சர் சு.முத்துசாமி

பெருந்துறையில் விரைவில் ஆட்டோமொபைல் நகரம் அமைக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 14வது கிரெடாய் ஃபேர் புரோ 2022 என்ற மாபெரும் வீட்டு வசதி & சொத்து கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த கண்காட்சியில் 70 கட்டுமான நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட சொத்துக்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.அமைச்சர் முத்துசாமி கிரெடாயின் ரியல் எஸ்டேட் விஷன் 2030 ஐ வெளியிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் முத்துசாமி கூறும்போது

54 வகையான பணிகளை செய்யக்கூடியவர்கள் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்து பயன்களை பெற்று வருகிறார்கள் .துறையில் பணியாளர்கள் இல்லாத இடங்களில் பணியாளர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை கோப்புகள் காலதாமதத்தை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

தரம் என்பது கவனிக்கப்படாமல் போய்விட்டதோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக்கூடாது. தரம் என்பது விலையை விட எதிர்காலத்திற்கு பயன்படக்கூடியது தரம் இல்லாத கட்டிடம் வரவே கூடாது. மறுகட்டமைப்பு அவசியமாக இருக்கிறது, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளது ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை பெத்தேல் நகரில் நீர் நிலை, மேய்ச்சல் நிலத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல் நிலத்தில் வீடு கட்டினால் அனைவருக்கும் இடம் கொடுக்க முடியும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, பெத்தேல் நகரில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே நோக்கம். அங்கு இருக்கும் சூழலை மாற்ற வேண்டும். மறுகட்டமைப்பு என்பது நீண்ட நாட்களுக்கு முன்பாக கட்டப்பட்ட வீடுகளை மாற்றி கட்டிக்கொடுக்க ஏற்பாடு. ஆட்டோமொபைல் நகரம் அமைப்பதற்காக சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை, நாமக்கல் உள்ளிட்ட இடங்கள் பரிசீலனையில் உள்ளது

புதிய நகரங்கள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகின்றது . சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழும பகுதி விரிவாக்கப்பணிகள் ஒரு மாத காலத்தில் முடிக்கப்படும் .குறைந்தபட்சம் 80 ஆண்டுகாலம் பயனுள்ள வகையில் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்