கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் வளாகத்தில் ஒருவர் தற்கொலை முயற்சி

கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் வளாகத்தில் ஒருவர் தற்கொலை முயற்சி
X

கந்துவட்டி கொடுமை ஆட்சியர் வளாகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சித்த சக்திவேல்.

ஈரோடு ஆட்சியர் வளாகத்தில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக பவானி பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வரும் ஜெகன் என்பவரிடம் 3லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து மாதந்தோறும் வட்டி கட்டிய நிலையில், அசல் பணத்தை திரும்ப செலுத்த முற்பட்டபோது 13 லட்சம் பணம் கட்ட வேண்டும் என நிதி நிறுவனர் ஜெகன் கூறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தனது நிலத்தை அபகரிக்க முயற்ச்சிப்பதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது மனைவியுடன் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்து காவல்துறையின் அவரை தடுத்து நிறுத்தி பாதுகாப்புடன் காவல்நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai marketing future