ஈரோட்டில் ஒரே நேரத்தில் 6 கடைகளில் கொள்ளை முயற்சி

ஈரோட்டில் ஒரே நேரத்தில் 6 கடைகளில் கொள்ளை முயற்சி
X

கொள்ளை முயற்சி நடைபெற்ற கடைகளில் விசாரணை மேற்கொள்ளும் போலீசார். 

சித்தோடு பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகளில் கொள்ளை முயற்சிநடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதிக்குட்பட்ட காளிங்கராயன்பாளையம், கவுந்தப்பாடி ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூம், மருந்துக்கடை உட்பட ஆறு கடைகளில் நேற்று இரவு ஒரே நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த மருந்துக்கடை உரிமையாளர் கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சித்தோடு காவல்துறைக்கு தகவல் அளித்தார் .இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி டிஎஸ்பி கார்த்திகேயன், உதவி காவல் ஆய்வாளர்கள் வடிவேல் குமார், துரைசாமி, துரைராஜ், பாலசுப்பிரமணியம், பிரகாஷ் ஆகியோர் மேற்கொண்ட விசாரணையில் ஒரே நேரத்தில் மர்ம நபர்கள் 6 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்திருப்பது தெரியவந்தது .இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவியில் காட்சிகள் பதிவாகி உள்ளதா எனவும் கைரேகை நிபுணர்களை கொண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!