திருநங்கை சங்கம் சார்பாக டாக்டர் பட்டம் பெற்ற ராதிகாவிற்கு பாராட்டு விழா
திருநங்கை ராதிகாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ராதிகா கடந்த ஆறாம் தேதி சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டத்தை சர்வதேச செயின்ட் ஆண்ட்ரூஸ் இறையியல் பல்கலைக்கழகம் சார்பாக அமைச்சர் அன்பரசன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட பெரிய வீட்டு திருநங்கைகள் சங்கம் சார்பாக டாக்டர் பட்டம் பெற்ற ராதிகாவிற்கு பாராட்டு விழா ஈரோட்டில் தனியார் மண்டபத்தில் நடந்தது.
இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்ற முனைவர் பட்டம் பெற்ற ராதிகாவிற்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை ராதிகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
முனைவர் பட்டம் சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டத்தை சர்வதேச செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தின் வாயிலாக பெற்றது பெருமைக்குரியதாக உள்ளது என்றார். தொடர்ந்து திருநங்கைகள் கல்வி, தொழில், வர்த்தகம், வியாபாரம் உள்ளிட்ட உதவிகளுக்கு தயக்கமின்றி தமிழக அரசை நாடலாம் என்றும் திருநங்கைகள் 95 சதவீத திருநங்கைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்றும் மீதமுள்ள 5 சதவீதம் மக்கள் மட்டுமே வளர்ச்சியில்லாமல் உள்ளனர் என்றார். திருநங்கைகளுக்கு உரிய நிறை குறைகளுக்கு தமிழக அரசு பேருதவியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu