என்சிசி டிபார்ட்மென்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

என்சிசி டிபார்ட்மென்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
X

கலெக்டர் கிருஷ்ணன் உன்னி.

என்சிசி டிபார்ட்மென்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நேஷனல் கேடட் கார்ப்ஸ் டிபார்ட்மென்டில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்டென்ட் -01 பணியிடம், அலுவலக உதவியாளர்-02 பணியிடங்கள், சௌக்கிதார் 03 பணியிடங்களுக்கும் ஆட்தேர்வு செய்யப்படவுள்ளது. இத்தேர்விற்கு 22-11-2021 வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆள்தேர்விற்கு முன்னாள் படைவீரர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதிகள் உடைய முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு https://cms.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து The Commanding Officer, 1 (TN) Girls Bn NCC, No.28, Dr.Alagappa Road, Sethu House - Annexe, Purasaiwalkam, Chennai 600 084 என்ற முகவரிக்கு 22.11.2021-க்குள் அனுப்பி வைத்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!