ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் மது போதையில் தடுமாறி விழுந்தவர் சாவு

ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் மது போதையில் தடுமாறி விழுந்தவர் சாவு
X
ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் மது போதையில் நிலைதடுமாறி சாக்கடையில் விழுந்தவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கல்லுப்பிள்ளையார் கோயில் வீதியை அடுத்த பேச்சியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜா.இவர் கண்ணையன் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் நேற்றிரவு சிலருடன் மது அருந்தியுள்ளார்.இந்நிலையில் அதிகாலை அப்பகுதியில் உள்ள சாக்கடையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

அவரை மீட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நேற்றிரவு முதல் மது அருந்தி கொண்டிருந்ததாகவும் போதையில் நிலைதடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் உண்மையான காரணம் முழுவிசாரணைக்கு பிறகுதான் தெரியவரும் என்றனர்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் இதனால் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!