அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக வேட்பாளர் திமுகவில் ஐக்கியம்

அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக வேட்பாளர் திமுகவில் ஐக்கியம்
X

அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என் பழனிவேல், இன்று திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என் பழனிவேல் இன்று திமுகவில் இணைந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில், முத்துக்குமாரசாமி கோவில் வீதியில் வசிப்பவர் என் பழனிவேல். அந்தியூர் பேரூராட்சி அதிமுக 9வது வார்டு பொறுப்பாளரான இவர், 9வது வார்டில் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கல் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வேட்பாளர் என் பழனிவேல், இன்று அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் முன்னிலையில், அவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சியில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

அந்தியூர் பேரூராட்சிக்கு, நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் வேட்பாளர் என் பழனிவேலின் தம்பி, சண்முகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future