தாளவாடி அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது

தாளவாடி அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது
X

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கல்குவாரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை.

வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது !!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கல்குவாரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கல்குவாரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட குருபரகுண்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை, தனது குட்டியோடு கடந்த ஒரு வருடமாக அங்குள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை 20 க்கும் மேற்பட்ட ஆடுகளும், 30 க்கும் மேற்பட்ட காவல் நாய்களையும் சிறுத்தை தாக்கி கொன்று வருவது தொடர் கதையாக இருந்து வந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்த நிலையில், தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும், வாடிக்கையாகி விட்டது. தொடர்ந்து இப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வருவதாலும், சிறுத்தை கல்குவாரியில் பதுங்கிகொள்வதால், சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் நீண்ட நாட்களாக தினறி வந்தனர்.

குருபரகுண்டி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கல் குவாரிகளில் இரவு நேரங்களில் இந்த சிறுத்தை நடமாடி வந்தது. இதனிடையே குருபர குண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்து கூண்டுகள் வைத்தனர். இன்று காலை அதிர்ஷ்டவசமாக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை வசமாக சிக்கிக்கொண்டது.

அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வந்து பார்த்த பொழுது கூண்டில் சிக்கிய சிறுத்தை ஆண் என்றும் அதற்கு நான்கு வயது இருக்கும் எனவும் தெரிய வந்தது. ஜீரஹள்ளி வனச்சரகர் ராமலிங்கம் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுட்டுள்ளனர். சிறுத்தை பார்க்கும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட்ட வன அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்தவுடன் பிடிபட்ட சிறுத்தையை பாதுகாப்பான, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். நீண்ட நாட்களாக வனத் துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை இன்று கூண்டில் மாட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் விவசாயிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!