ஈரோட்டில் நம்மைக் காக்கும் 48 திட்டத் தொடக்க விழா

ஈரோட்டில் நம்மைக் காக்கும் 48 திட்டத் தொடக்க விழா
X

திட்டத்தை துவக்கி வைத்த கலெக்டர் மற்றும் எம்எல்ஏ திருமகன்   

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48 திட்டத் தொடக்க விழா ஈரோட்டில் நடைபெற்றது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 திட்ட தொடக்க விழாவை காணொலி மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெருந்துறையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா எம்எல்ஏ, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி, ஈரோடு மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி