விவசாயிகளுக்கு தேவையான 1300 டன் யூரியா ரயில் மூலம் வருகை
ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்த யூரியா.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் போன்ற பாசன வாய்க்கால்களில் தண்ணீர் காரீப் பருவ பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு விவசாய பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த பாசனங்கள் மூலம் சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, பருத்தி, பயறு வகைகள் பயிரிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு தேவையான உரம் யூரியா, மற்றும் திரவ வடிவிலான யூரியா ஊட்டசத்து, பூச்சி கொல்லி மருந்து போன்ற உரங்கள் தமிழக முதல்வர் உத்திரவுப்படி தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் பரிந்துரைப்படி ஈரோடு மாவட்டத்திற்கு 1300 டன் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்தது
கடந்த அதிமுக ஆட்சியில் தகுந்த ஏற்பாடு செய்யாமல் விட்டதால் கடந்த மாதம் வரை உர விற்பனை நிலையங்களில் ஒரு ஆதார் கார்ட்டுக்கு ஒரு மூட்டை 50 கிலோ மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கடுமையான உர தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் வரலாற்றில் முதன் முறையாக வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவசாய பணிகள் தொய்வின்றி நடக்க தமிழக முதல்வர் உத்திர விட்டதால் தேவையான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று காரைக்காலில் இருந்து 1300 டன் யூரியா ரயிலில் ஈரோடு வந்தது அதனை ஈரோடு வேளாண்மை துறை இணை இயக்குநர் சின்னுச்சாமி முன்னிலையில் ரயில் நிலைய குடோனில் இறக்கி வைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஒரு மூட்டை யூரியாவிற்கு சமமான திரவ வடிவிலான யூரியா அறிமுகப்படுத்தி உள்ளனர். இதனை ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு சொட்டு விட்டாலே போதுமானது. எளிதில் எடுத்து செல்ல முடியும். வாடகை சுமை, கூலி சேதாரம் இவைகள் விவசாயிகளுக்கு இல்லை என்பதால் லாபகரமாக உள்ளது. எனவே ஈரோடு மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் பெற்று கொள்ளலாம் எனவும் இந்த ஆண்டு உரத் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu