ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி: டிஎஸ்பி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி: டிஎஸ்பி தகவல்
X

ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் மாவட்ட தேர்தல் பிரிவு டிஎஸ்பி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் மாவட்ட தேர்தல் பிரிவு டிஎஸ்பி தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் நகப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 22 -ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்களும், பவானி நகராட்சியில் 30 ஆயிரத்து 282 வாக்காளர்களும், கோபி நகராட்சிகள் 47 ஆயிரத்து 545 வாக்காளர்களும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 16 ஆயிரத்து 933 வாக்காளர்களும், சத்யமங்கலம் நகராட்சியில் 33 ஆயிரத்து 86 வாக்காளர்களும், 42 பேரூராட்சிகளில் 4 லட்சத்து 1, 538 வாக்காளர்கள் என மொத்தம் 9 லட்சத்து 72 ஆயிரத்து 575 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.மாவட்டம் முழுவதும் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 113 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி அண்ணாதுரை கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 1251 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அதிக மக்கள்தொகை கொண்ட 35 இடங்களில் உள்ள 113 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க செய்யப்படும். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அமைதியாக தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று இறுதிப் பட்டியல் வெளியானதும், வேட்பாளர்களை பொறுத்து பதட்டமான ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil